நம்ம லொல்லுசபா மனோகருக்கும் வலைப்பூ தொடங்க ஆசை வந்து விட நம்ம தல பாலபாரதியிடம் போறாரு நம்ம மனோகரு. அங்க என்ன நடக்குது, இதோ. . . . .
சார் எனக்கும் வலைப் பூ தொடங்கி வலைப் பதிவு எழுதனும்னு ஆசை எனக்கு கொஞ்சம் உதவி பண்றீங்களா. . . .
நீங்க வலைப்பதிவு ஆரம்பிக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு, டி.வி.ல சிரிக்க வைக்கிற மாதிரி பதிவுலயும் எல்லோரையும் சிரிக்க வைக்கனும். என்ன உதவி வேணும்னாலும் செய்யுறேன். . .
சார் எனக்கு கம்ப்யூட்டர் பத்தி ஒன்னும் தெரியாதும், நீங்கதன் ஆரம்பத்துலேர்ந்து சொல்லி தரணும்.
கண்டிப்பா சொல்லித்தறேன். நிங்க பிளாக்கர்ல பதியனும்னா உங்களுக்கு கூக்குள்ள அக்கவுண்ட் இருக்கனும், உங்களுக்கு கூகுள்ள அக்கவுண்ட் இருக்கா. . . .
எனக்கு பக்கத்து டீ கடைல அக்கவுண்ட் இருக்கு, அத வச்சு ஆரம்பிக்கலாமா. . . .
(டீவி ல பண்ற மாதிரியே பண்றானே. . . என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு)
டீக்கடை அக்கவுண்ட வச்சு பதிவு எழுத முடியாது, கூகுள்ள அக்கவுண்ட் ஓபன் பண்ணனும், நானே உங்களுக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணி தரேன். . . .
அப்புடியே அந்த அக்கவுண்ட்ல 500 ஓ 1000 மோ போட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியாமா போகும். . . . .
ங்கொய்யால, என்ன ஓவரா எடக்கு மடக்கா பேசுற, பேசாம இரு என்று தல மனோகர் தலைல தட்ட அமைதியாகிறார்.
தல ரொம்ப நேரம் கஷ்டப் பட்டு எல்ல வேலைகளையும் முடித்து விட்டு, எப்படி பதிவு எழுதுவது என எல்லாவற்றையும் பொருமையாக விளக்குகிறார்.
இவ்வளவு ஆர்வமா, பதிவு எழுத ஆசப்படுறீங்களே பதிவுல என்னென்ன எழுதப் போறீங்க. . . .
அது ஒன்னும் இல்ல சார், இங்க பாலாபாய் பாலாபாய்ன்னு ஒருத்தர் இருக்காராமே, அவர காலாய்க்கறதுக்கு பா.க.ச ன்னு சங்கமே வச்சு அவர கலாய்க்கிறாங்களாமே அவர கலாய்க்கதான் இந்த ஏற்பாடு. . . .
என்னது என்று தல நெஞ்சைப் பிடித்துக் கொள்ள.
ஜெய் சங்கர் ன்னு ஒருத்தர் வந்தாரு, எத்தன நாளைக்கு தான் சபாவுல (லொல்லு சபா) இருந்துகிட்டு சினிமா நட்சத்திரங்கள கலாய்ப்பீங்க , எங்க சங்கத்துல சேர்ந்து பதிவுலக நட்சத்திரம் பாலாபாயை கலாய்ங்கன்னு சொன்னார். எனக்கு பதிவ பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு சொன்னேன், அவ்ரு தான் உங்க அட்ரச கொடுத்து இவர போய் பாரு வலைப் பதிவு ஆரம்பிக்க வழி சொல்லுவார்னு சொன்னார்.
ரொம்ப நன்றி சார், பா.க.ச போட்டில எனக்கு பரிசு கிடைக்கனும்னு வாழ்த்துங்க சார் என்று மனோகர் கூற
ங்கொய்யால என்று நம்ம ஜெய்யை கொலைவெறியோடு்யோடு தேடுகிறார் தல. . . . . .
லொல்லுசபா மனோகரும் தல பாலபாரதியும் - பா.க.ச போட்டிக்கு [#24]
Posted by வெங்கட்ராமன் at 14 comments
Labels: லொல்லு சபா
சிவாஜி பன்ச் டயலாக்கும், நம்ம லொல்லு சபா மனோகரும் [#23]
சிவாஜி படத்தில் விவேக்கிற்கு பதிலா, நம்ம லொல்லுசபா மனோகர் நடித்திருந்து அவர் ஸ்டைல்ல பேசி இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை.
லொல்லு சபா மனோகரை போலவே படிக்கவும், கைய சுத்திக்கிட்டே படிச்சிங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.
ரஜினி : Cooool. . . .
மனோகர் : கூழா, எந்த கோயில்ல ஊத்தரங்கன்னு சொல்லுங்க. . . .
ரெண்டு பேருக்கும் போயி வாங்கி கிட்டு வரேன். . . . ..
ரஜினி : அம்மா எனக்கு தேவை தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு. . . .
மனோகர் : தமிழ் காலாச்சாரத்தயெல்லாம் சீதனமா குடுப்பாங்களா. . . . .?
ஸ்ரஏேயா : பணம் போனா வரும், உயிர் வருமாங்க. . . .?
மனோகர் : நேத்து டீ குடிக்க ரெண்டு ரூவா கொடுத்தேன், அது திரும்ப வருமாமாமா. . . . .
ரஜினி : பாஸ், மொட்ட பாஸ் . . .
மனோகர் : விக்கு வைக்கலேன்னா நீங்க, சொட்ட பாஸ்
ரஜினி : கண்ணா, பண்ணிங்க தான் கூட்டமா வரும். . . . .
மனோகர் : இல்லையே நான் தனியா தான் வந்திருக்கேன். . . .
ரஜினி : இனி நான் போற பாத சிங்கப் பாதை
மனோகர் : ஏம்பா, சிங்கத்தோட பாதைல போறியே, சிங்கம் கடிச்சிடாது. . . .?
பதிவு எப்படீன்னு சொல்லுங்க மக்களே. . . .
(இது சொந்த சரக்கு)
Posted by வெங்கட்ராமன் at 40 comments
Labels: மனோகர், ரஜினி, லொல்லு சபா
ராமராஜன் - சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் [#22]
இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன் " பார்ட் - II
நம்ம டவுசர் புகழ் கி " ராமராஜன் " ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் .
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் .
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.
காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள் .
ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா ? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க !!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க !!!
கவுண்ட்ஸ் : என்ன தம்பி அப்படி சொல்லிட்ட . இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை .
ரா .ரா: யார் யாரு???
கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க ! அப்பறம் டி .சி. எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ -கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு !!!
செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார் .
கவுண்ட்ஸ் : யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட ...
ரா. ரா: ஏன்ன அடிச்சிங்க ???
கவுண்ட்ஸ் : ஏன் அடிச்சனா ? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா ? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட ???
....
2 நிமிடம் கழித்து
கவுண்ட்ஸ் :அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா ?
1 நிமிடம் கழித்து :
கவுண்ட்ஸ் : ஹும் !!! ஐயோ !!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட ?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது .
ரா . ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான் ?
கவுண்ட்ஸ் : என்ன கேட்டானா ? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம் ... ஐ - கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான் .
ஜி . பாலையா : ஹாஹாஹா
கவுண்ட்ஸ் : அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை . இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா . ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது ? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன் .
காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார் . பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார் .
புதுசு : நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது . 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும் , சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு ...
கவுண்ட்ஸ் : ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா ?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ் : அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன ... ஏய் சொல்லு ...சொல்லு
புதுசு : சொல்றங்க !!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் " A" போட்றன்னு சொன்னாருங்க ..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
கவுண்ட்ஸ் : ஓடிப்போ நாயே!!! ( செந்திலைப் பார்த்து ): ஏண்டா இப்படி பண்ண?
செந்தில் : ஒரு விளம்பரம்தான்...
கவுண்ட்ஸ் : ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான் !!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
( சரளாவைப் பார்த்து ): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????
கோ . சரளா: தோ !! கொஞ்சம் சும்மா இருக்கீகளா !!! என்னை TCS ல கூப்டாகோ, Wipro ல கூப்டாகோ , infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன் ...
கவுண்ட்ஸ் : ஹிம்ம்ம்ம்ம்ம்...... ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracle ல கூப்டாகோ, நியூ யார்க்ல IBM ல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா ?
கோ . சரளா : ஹிக்க்க்க்ம் ... இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை ...
கவுண்ட்ஸ் : ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க !!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன் ! ஜாக்கிரதை !!!
ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள் ...
-------------------------------------------------------------------------
மெயில்ல வந்த நகைச்சுவை.
இன்னொரு பகுதி
எழுதனவனுக்கு பெர்பார்மன்ஸ் ரிவ்யூவுல டபுள் இன்க்ரிமென்ட் கிடைக்கனும்.
எழுதுனது வேற யாரும் இல்ல நம்ம வெட்டிப்பயல்
Copy Paste செய்தது வெங்கட்ராமன் (இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல)
Posted by வெங்கட்ராமன் at 2 comments
Labels: கவுண்டர், சாப்ட்வேர்
கணவன் - மனைவி சிரிப்பூ [#21]
நான் எப்பவும் என் மனைவி போட்டாவ கூடவே வச்சிருப்பேன்.
எப்ப எந்த பிரச்சனை வந்தாலும் அவ போட்டாவ எடுத்து பார்த்துக்குவேன். அப்புறம் அந்த பிரச்சனை என்ன பாதிக்கவே பாதிக்காது,
எப்படி.
இந்த பிரச்சனைய விடவா வாழ்க்கைல பெரிய பிரச்சனை வந்துடப் போகுது ங்கிற நினைப்பு தான் வரும் என் மனைவி போட்டோவ பாக்குறப்ப. . . . .
-------------------------------------------------------------------------------
நீதிபதி : ஏன் உன் மனைவிய விஷம் வச்சு கொல்ல பார்த்த. . . . .
கணவன் : அவ ரசம் வச்சு என்ன கொல்ல பார்த்தா சார் அதான். . . . .
-------------------------------------------------------------------------------
Posted by வெங்கட்ராமன் at 2 comments
Labels: கனவன் - மனைவி
சிவாஜி டிரைலர் டவுன்லோடு செய்யுங்கள் [#19]
விரும்பும் போதெல்லாம் சிவாஜி டிரைலர் பார்க்கனும்னா, டி.வி இல்லேன்னா இனையத்தில மட்டும் தான் பார்க்க முடியுமா. . . .
இந்தாங்க ரசிகப் பெருமக்களே சிவாஜி டிரைலரை டவுன்லோடு செய்யுங்கள் விரும்பும்போதெல்லாம் பாருங்கள்.
சிவாஜி டிரைலர் 6 MB [FLV formet]
என்ன இது FLV formet ல இருக்குன்னு கேக்குறீங்களா, இந்தாங்க FLV Player
Wimpy FLV Player
http://www.youtubex.com ங்கிற வலைதளம் மூலமா நீங்கள் விரும்பும் You Tube வீடியோக்களை FLV formet ல பதிவிறக்கம் செய்ய முடியும். நானும் அப்படிதாங்க பதிவிறக்கம் செய்தேன்
மன்னவன் ஆனாலும்,
மாடோட்டும் சின்னவன் ஆனாலும்
சாதாரன ரசிகன் தானடா ரஜினியை பார்க்கையிலே . . . .!!!!
நன்றி சின்னக்குட்டி.
Posted by வெங்கட்ராமன் at 0 comments
17ம் (சிரிப்)பூ - சண் டி.வி இல் ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில்
உங்கள் சண் டி.வி யின் ஹாலிவுட் திரைப்படங்களின் அணிவகுப்பு, இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறு காலை 11 மணிக்கு . . .
மக்களே, இத பார்த்துடு ஞாயித்துக் கிழமை டி.வி முன்னாடி உட்கார்ந்துடாதீங்க இந்த சண் டி.வி ன்னு ஒரு சேனலே கிடையாது. ஹி, ஹி, ஹி டி.வி பேர நல்லா படிச்சு பாருங்க.
குறுந்தகவலில் வந்த சேதி, நம்ம கைவண்ணத்தில இப்படி. .. . . ...
Posted by வெங்கட்ராமன் at 6 comments
16ம் (சிரிப்)பூ ஒரு உண்மையான சந்தோஷம்.
உண்மையான சந்தோஷம் எது தெரியுமாங்க, மத்தவங்கள சந்தோஷப் படுத்தறது தான்.
மகாலட்சுமி அவர்களின் கல்விக்காக செந்தழல் ரவி அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற்றவிட்டது என்று தெரிந்தவுடன் மிகவும் சந்தோஷப் பட்டேன். அதுவரை http://spreadsheets.google.com/pub?key=pL1x9n_V5iuTVxNIfr0y9Qg சென்று வேண்டிய தொகை சேர்ந்து விட்டதா என்று அவ்வப் போது பார்த்துக் கொண்டிருந்தேன்.
கல்விக்கு உதவியவர்களுக்கும், உதவ நினைத்து முடியவில்லையே என்று வருத்தப் பட்டவர்களுக்கும் இந்த செய்தி சந்தோஷம் தரும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.
இதோ நம்ம செந்தழல் ரவி சார் பதிவு.
நன்றி நன்றி !!! மகாலட்சுமி கல்விக்கு உதவியாச்சுங்க !!!
/// யாராவது இந்த பதிவுக்கு இலவச விளம்பரம் தந்தால் மகிழ்வேன்..
அப்படீன்னு செந்தழல் ரவி சார் சொல்லி இருந்தார், அவர் பதிவுல
அதுக்கு தான் இந்த பதிவு.
Posted by வெங்கட்ராமன் at 0 comments