சிவாஜி பன்ச் டயலாக்கும், நம்ம லொல்லு சபா மனோகரும் [#23]

சிவாஜி படத்தில் விவேக்கிற்கு பதிலா, நம்ம லொல்லுசபா மனோகர் நடித்திருந்து அவர் ஸ்டைல்ல பேசி இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை.

லொல்லு சபா மனோகரை போலவே படிக்கவும், கைய சுத்திக்கிட்டே படிச்சிங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.

ரஜினி : Cooool. . . .
மனோகர் : கூழா, எந்த கோயில்ல ஊத்தரங்கன்னு சொல்லுங்க. . . .
ரெண்டு பேருக்கும் போயி வாங்கி கிட்டு வரேன். . . . ..

ரஜினி : அம்மா எனக்கு தேவை தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு. . . .
மனோகர் : தமிழ் காலாச்சாரத்தயெல்லாம் சீதனமா குடுப்பாங்களா. . . . .?


ஸ்ரஏேயா : பணம் போனா வரும், உயிர் வருமாங்க. . . .?
மனோகர் : நேத்து டீ குடிக்க ரெண்டு ரூவா கொடுத்தேன், அது திரும்ப வருமாமாமா. . . . .


ரஜினி : பாஸ், மொட்ட பாஸ் . . .
மனோகர் : விக்கு வைக்கலேன்னா நீங்க, சொட்ட பாஸ்


ரஜினி : கண்ணா, பண்ணிங்க தான் கூட்டமா வரும். . . . .
மனோகர் : இல்லையே நான் தனியா தான் வந்திருக்கேன். . . .


ரஜினி : இனி நான் போற பாத சிங்கப் பாதை
மனோகர் : ஏம்பா, சிங்கத்தோட பாதைல போறியே, சிங்கம் கடிச்சிடாது. . . .?


பதிவு எப்படீன்னு சொல்லுங்க மக்களே. . . .

(இது சொந்த சரக்கு)

40 Comments:

said...

me first :)

said...

வாங்க இம்சை.
நன்றி.

said...

கலக்கல் காமடி :)

said...

நல்லா இருக்கு....!!!!!

said...

சூப்பர்...மனோகர் பாணியிலேயே கையை சுத்தி சுத்தி பேசுவதாக கற்பனை பண்ணினேன்.

said...

//ரஜினி : இனி நான் போற பாத சிங்கப் பாதை
மனோகர் : ஏம்பா, சிங்கத்தோட பாதைல போறியே, சிங்கம் கடிச்சிடாது. . . .?//

பின்னிட்டீங்க...அதுவும் நம்ம மனோகர் ஸ்டைலுல நினைச்சுப்பாத்து....சேர்-ல இருந்து கீழ விழுந்துட்டேன்....

Anonymous said...

good ,i really smiled after reading each ...rajini valga
rajini veriyan

said...

super...

said...

நல்லாயிருக்கு.. அதுவும் கூல் .. சூப்பர்..

Anonymous said...

சிவாஜி படத்தை பற்றிய விவாத மேடை
www.thedal-mahadeer.blogspot.comல்
அமைக்க பட்டுள்ளது, வாங்க உங்க கருத்தை சொல்லுங்க.

said...

:))

said...

--------------------------
TBCD said...

நல்லா இருக்கு....!!!!!
--------------------------

நன்றி TBCD

said...

--------------------------
PPattian said...

சூப்பர்...மனோகர் பாணியிலேயே கையை சுத்தி சுத்தி பேசுவதாக கற்பனை பண்ணினேன்
--------------------------

நன்றி PPattian,
மனோகரை டி.வி ல பார்த்தாலே நான் சிரிக்க ஆரம்பித்து விடுவேன்.

said...

---------------------------
சாத்தான்குட்டி said...

பின்னிட்டீங்க...அதுவும் நம்ம மனோகர் ஸ்டைலுல நினைச்சுப்பாத்து....சேர்-ல இருந்து கீழ விழுந்துட்டேன்....
---------------------------

வாங்க சாத்தான்குட்டி,
பார்த்து அடி ஒன்னும் படலியே. . . .

said...

நன்றி rajini veriyan

நல்ல வேலை தலைவர் டயலாக்க வச்சு கிண்டல் பண்றமே ஏதாவது பிரச்சனை வருமோன்னு பயந்தேன்.

உங்கள் பின்னூட்டம் பயத்தை போக்கி விட்டது.

said...

---------------------------------
வெட்டிப்பயல் said...
super...
---------------------------------

வாங்க வெட்டி,
உற்சாகத்திற்கு நன்றி.

said...

---------------------------------
-L-L-D-a-s-u said...
நல்லாயிருக்கு.. அதுவும் கூல் .. சூப்பர்..
---------------------------------

வாங்க -L-L-D-a-s-u
கூல் தான் முதலில் யோசித்தேன்.

said...

வாங்க Boston Bala said...
உங்க Snap Judje ல நம்ம பதிவு வரும் போதெல்லாம், மிகவும் சந்தோஷமாய் இருக்கும்.

மிக்க நன்றி.

said...

வாங்க Mahadeer,
பின்னூட்டத்திற்கு நன்றி.

என் கருத்தை தெரிவித்து விட்டேன்.

said...

நல்ல கற்பனை....

said...

சூப்பர் !

:)

வளமான கடிகாலம் முன்னால இருக்கு
:)

said...

தஞ்சாவூரான் said...
நல்ல கற்பனை....

நன்றி தஞ்சாவூரான்.

said...

********************************
வளமான கடிகாலம் முன்னால இருக்கு
:)
********************************

நன்றி கோவி.கண்ணன்.

நம்ம கடி யாருக்கும் வலிக்காம, எல்லோரும் சிரிச்சா சரிதான்.

said...

****************************************
கப்பி பய said...
:))))
****************************************

சிரிப்பானுக்கு நன்றி கப்பி.

Anonymous said...

கலக்கிபுட்டீங்க போங்க...

said...

KalakkaL..!!!

said...

Bayangara siripps

thanks

said...

-------------------------------------------
நா.ஆனந்த குமார் said...

KalakkaL..!!!
-------------------------------------------
வாங்க ஆனந்த குமார், மிக்க நன்றி.

said...

-----------------------------
Blogeswari said...
Bayangara siripps
-----------------------------

Blogeswari மிக்க நன்றி.

said...

சூப்பர் காமெடி.
:))

said...

Kai atra effect thaan illa.... super!

said...

சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.அவர் *தன் ராசி எது என்பதிலேயே குழப்பமிருப்பதாக கூறிவருவது தெரிந்ததே. இது ஜோதிட அரிச்சுவடியை புரட்டினாலே தெரிந்து கொள்ளக்கூடிய விஷயம். ஆனால் சுஜாதாவோ தம்து சோம்பலை மறைத்து ,ஜோதிடத்தின் நம்பகத்தன்மையை சந்தேகத்துக்குள்ளாக்கிவருகிறார். முதலில் இந்த பஞ்சாயத்தை தீர்த்துவிட்டு சிவாஜிக்கு போகலாம். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் ப்ரஸ்தாபிக்கப்படுகின்றன. பகுத்தறிவாளர்கள் மற்ற நட்சத்திரம் எல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஒப்புக்கு சப்பாவா என்று நக்கலடிக்கிறார்கள். உண்மையில் நட்சத்திரம் என்பது நட்சத்திர மண்டலத்தை குறிக்கிறது. அஸ்வினி என்றால் ஆகாய வெளியில் குதிரை வடிவத்தில் தென்படும் நட்சத்திர தொகுப்பாகும். நிற்க, சுஜாதாவின் ஜன்ம நட்சத்திரம் கிருத்திகை என் கிறார். ஆனால் தன் ராசி மேஷமா, ரிஷபமா என்பதில் குழப்பம் இருப்பதாக கூறுகிறார். சந்திரன் கிருத்திகை நட்சத்திர மண்டலத்தில் 24 மணி நேரம் சஞ்சரிக்கிறார். இதை 4 பாகங்களாக்கி உள்ளார்கள். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாகத்தில் (நட்சத்திரம் உதயமான முதல் 6 மணி நேரத்தில்) பிறந்திருந்தால் அவர் ராசி மேஷமாகும். அடுத்த 3 பாகங்களில் அதாவது அடுத்த 18 மணி நேரத்தில் பிறந்திருந்தால் அவர் ராசி ரிஷபம். இந்த சின்ன விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் வாசகர்களை குழப்பி வருவது அவருக்கு அழகல்ல. அவர் தன் பிறப்பு விவரங்களை எனக்கு மெயிலில் அனுப்பினால் அவர் ராசி எது என்று ஸ்டாம்பு பேப்பரில் எழுதி தர தயார்.

said...

கீதாச்சாரியன்,இந்து மித்திரன் தவிர எல்லாரும் சிவாஜி படத்தை விமர்சித்துவிட்டார்கள் என்று சுஜாதா எழுதியுள்ளது நிஜமே. ஆந்திர நீதிபதிகள் கூட உலகமே பார்த்த பின்னாடி தடை கேட்கறிங்களே என்று கூறியிருக்கிறார்கள்.(படத்தில் சோனியா படத்தின் பக்கத்தில் வில்லனான சுமன் படத்தை காட்டியதற்காக காங்கிரஸ் கட்ச்சியினர் தடை கேட்டு கோர்ட்டுக்கு போனது தெரிந்ததே.)

இருந்தும் இந்த கட்டுரையை வலைதளத்தில் வைக்க காரணம் நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்பதே. சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.

*இனி சிவாஜி பஞ்சாயத்துக்கு வருவோம். ஒரு பெண்ணிற்கு ஜாதகத்தில் கடும் தோஷம் உள்ளது. இதனால் கணவனுக்கு கண்டம் வரும் என்பது கதை. ரஜ்ஜு பொருத்தம் வேறு இல்லையாம் . எனவே கணவன் ஆபிச்சுவரியில் வருவது நிச்சயமாம். ஜோதிடருக்கு நாக்கில் மச்சமாம். எனவே அவர் சொல்வது நிச்சயம் பலிக்குமாம்.

ஜோதிட ஆய்வு என்பது பிராமணர்களின் சேப்டி லாக்கரில் இருந்து சூத்திரர்கள் கைக்கு மாறி பலகாலம் ஆயிற்று. பிராமணர்களை திதி பார்க்க மட்டுமே மக்கள் அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாதி அபிமானத்தில், சூத்திரர்களின் வசம் போய்விட்ட ஜோதிடத்தை கேலிக்கிடமாக்கிவிடவேண்டும் என்ற தகிப்பினால் மேற்படி முடிச்சை சிவாஜி படத்திற்கு சுஜாதா பரிந்துரைத்திருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தம்:

திருமண பொருத்தம் என்பது முதலில் ஆண், பெண் ஜாதகங்களை வைத்து பார்க்கப்படவேண்டும். பெண் ,பிள்ளை ஜாதகத்தை பொறுத்து அவரவர்க்கு வர வேண்டிய வாழ்க்கை துணையை பற்றிய அம்சங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த அம்சங்கள் தற்போது வந்துள்ள வரனுக்கு உள்ளதா என்று ஒப்பிடவேண்டும். பிறகு இருவருக்கும் போதுமான ஆயுள்(8 ஆமிடம்),தோஷங்கள் உள்ளனவா (செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் இத்யாதி),குரு,சுக்கிரன் நிலை என்ன? மறுமண யோகம் (7 ஆமிடம்) ஏதும் உள்ளதா? இதை எல்லாம் பார்த்தாக வேண்டும்.

தோஷமிருந்தால் இருவருக்கும் ஒரே அளவில் இருக்க வேண்டும் (அ) சுத்த ஜாதகங்களாக இருக்க வேண்டும். படத்தில் பெண்ணின் ஜாதகம் மட்டுமே ஜோதிடரிடம் காட்டப்படுகிறது. அவரோ தன் நாக்கில் உள்ள மச்சத்தை மட்டுமே தகுதியாக கொண்டு பலனை அள்ளி வீசுகிறார்.

மச்சத்துக்கு காரகர் ராகு. ஜாதகத்தில் ராகு எங்கு நிற்கிறாரோ அந்த பாகத்தில் மச்சம் ஏற்படும். நாக்கு என்பது 2 ஆமிடம். ஜாதகத்தில் 2 ஆமிடத்தில் ராகு நின்றால் நாக்கில் மச்சம் ஏற்படும்.
2 ஆமிடத்தில் ராகு வாக்கு பலிதத்தை எப்படி கொடுப்பார்?. வாக்கு தவறுதல்,பசி,பட்டினி,விஷம் குடித்து சாதல்,குடும்பத்தை விட்டு வெளியேறுதல் போன்ற கெட்ட பலன் களைத்தான் தருவார். நாக்கில் மச்சமிருப்பவர் சொன்னது பலிக்கும் என்பது தவறு.

வெறுமனே பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்துவிட்டு பலன் சொல்லும் ஜோதிடர் நிச்சயமாக ஒரு பொய்யராகத்தான் இருக்க வேண்டும். பெண் ஜாதகப்படி கணவனுக்கு தோஷம் இருந்து விட்டால் போதாது. அவனுடைய ஜாதகமும் அற்பாயுள் ஜாதகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மரணம் ஏற்படும்.

அதிலும் ஜோதிடவியலை பொறுத்தவரை ம்ரணம்,சிறை,பிரிவு, ஐ.பி போடுதல்,தலை மறைவாதல்,தனிமை எல்லாமே சமமான பலன் களாகும். பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். அதில் தோஷம் இருந்த மாத்திரத்தில் கணவன் செத்துத்தான் போவான் என்று எந்த ஜோதிடனும் கூறக்கூடாது. அப்படி கூறினால் அவன் பொய்யன்.நாஸ்திகன். ஜாதகத்தை பார்த்து பலன் சொன்னாலே இது நிலைமை.

ரஜ்ஜுப்பொருத்தம்:மேலும் படத்தில் ரஜ்ஜுபொருத்தம் பற்றியும் ப்ரஸ்தாபனை வருகிறது. ஏக ரஜ்ஜு வருவதால் மரணம் நிச்சயம் என்று கூறப்படுகிறது. ரஜ்ஜு என்பது முக்கியமான பொருத்தம்தான் இல்லை என்று கூறவில்லை. அதற்காக மரணம் என்று ஒருவரியில் கூறுவதும்,அடுத்தடுத்த சம்பவங்கள் அதற்கேற்ற மாதிரியே நடப்பதும் தான் ஜோதிடத்தை கேலிக்கிடமாக்குகிறது.

மொத்தம் 5 வித ரஜ்ஜுக்கள் உள்ளன. இதில் எந்தெந்த ரஜ்ஜு ஏக ரஜ்ஜுவானால் என்ன பலன் என்று ஜோதிடம் குறிப்பிட்டு கூறுகிறது. அதன் விவரம் வருமாறு:
1.சிரோ ரஜ்ஜு-கணவன் மரணம்2.கண்ட ரஜ்ஜு-பெண் மரணம்3.உதர ரஜ்ஜு-புத்திர தோஷம்4.தொடை-பண நஷ்டம்5.பாதரஜ்ஜு-பிரயாணத்தில் தீமை
ஜாதகப்பொருத்தம் பார்க்க ஆண், பெண் ஜாதகங்களை பார்த்தாக வேண்டும்.

சிவாஜி ஜோதிடர் பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்து விட்டு,ரஜ்ஜு பொருத்தம் இல்லை மரணம் நிச்சயம் என்று கூறுகிறார்.
அவர் சொன்னது போலவே நடக்கிறது.

பல நூறு கோடிகள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் , அதிலும் அறிவு ஜீவியும், பிராமணருமான சுஜாதா வேறு டீமில் இருக்கிறார். ஒரு கிளி ஜோசியரை வரவழைத்து சிங்கிள் டீ வாங்கி கொடுத்து கேட்டிருந்தாலும் விஷயத்தை சொல்லியிருப்பார்.

அதைக் கூட செய்யாது சுஜாதா பாஷையில் சொன்னால் ஜல்லியடித்து, வேதங்களின் அந்தர் பாகமான ஜோதிடத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளை வெகுஜன மீடியாவில் பதிவு செய்துள்ளார்கள்.

said...

//பதிவு எப்படீன்னு சொல்லுங்க மக்களே. . . .

(இது சொந்த சரக்கு)//
சரக்கு ரொம்ப நல்லாயிருக்கு வெங்கட்ராமன்!!!;-)

said...

I've circulated this to my mailing list also(with your name only!!!)

said...

மனோகர் ஸ்டைலிலேயே வாசிச்சு பாத்தேன்.. செம லொள்ளு..

:))

said...

சிறில் அலெக்ஸ் சார் நன்றி.

ஸ்ரீதர் வெங்கட், மனோகர் கைய சுத்தற மாதிரி படம் கிடைக்குமான்னு பார்த்தேன் கிடைக்கல. அடுத்த முறை முயற்சி பண்ணுகிறேன். நன்றி.

சித்தூர் முருகேசன்,ஜோதிடம் சம்பந்தமான பல விஷயங்களை விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி.
நீங்கள் தனி பதிவாக போட்டால் மிக்க நன்றாக இருக்கும், பலரும் வந்து தங்கள் கருத்துக்களை அறிய வசதியாக இருக்கும்.

யோசிப்பவர், மிக்க நன்றி.
உங்க இ-மெயிலுக்கு ஸ்பெசல் நன்றி.

said...

கில்லி வழியா உள்ள வந்தேன்! சிங்கப்பாதை ந்ல்ல காமெடி!! :))

said...

நன்றி காயத்ரி.

இதைப் பலரிடமும் கொண்டு சென்ற கில்லிக்கு நன்றி.

said...

நல்லா இருக்கு