15ம் (சிரிப்) பூ

ஹோட்டல் காரர் : ஏன் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போய் சாப்பிடறீங்க. இங்கேயே சாப்பிடலாமே.

திருவாளர் விவரம் : டாக்டர் என்ன ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்கார் அதான்.

14ம் (சிரிப்)பூ

நோயாளி : டாக்டர், ரெண்டு நாளா எனக்கு பயங்கர வயித்துவலி. என்னால பொறுக்க முடியல.





டாக்டர் : வயிரு வலிக்கும் போது, எதுக்கு பொருக்க போறீங்க, ஓய்வு எடுத்தக்கலாமே . . . . . . .


(குருந்தகவலில் வந்த நகைச்சுவை)

13ம் (சிரிப்)பூ - (தீபாவளி சிறப்பு பூ)

பையன் வேகமாக அப்பாவிடம் ஓடி வருகிறான்.

பையன் : அப்பா, அப்பா . . . .

அப்பா : என்னடா ஆச்சு, ஏன் இப்படி மூச்சிறைக்க ஓடி வற்ற.

பையன் : தீபாவளிக்கு அம்மா பண்ணின ஸ்பெசல் ஸ்வீட்ட நம்ம நாய் சாப்ட்ருச்சு.

அப்பா : (தப்பிச்சோம்டா என்று மனதுக்குள் எண்ணியபடியே) கவலைப் படாதே நான் உனக்கு வேற ஒரு நாய் வாங்கி தறேன்.



(சொந்தக் கற்பனை, நிஜமா)


12ஆம் (சிரிப்)பூ

திருவாளர். விவரத்தின் பையன் ஒருநாள் அவரிடம் ஓடிவந்தான்...

"அப்பா அப்பா !!! உன்னைத்தேடி ஒரு தாடிக்கார அங்கிள் வந்திருக்கார்... உங்கூட மூணாப்பு வரைக்கும் படிச்சவராம்..."

திருவாளர். விவரம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்...

'மூன்றாவது படிக்கும்போது நம்மளோட படிச்சதுல, யார் தாடி வச்சிருந்தது . . . ?'

(எங்கோ படித்தது)

11ஆம் (சிரிப்)பூ (கணக்கு விடைத்தாள் அவுட்டானது)

வழக்கமாக வினாத்தாள் தான் அவுட்டாகி வந்து பரபரப்பாகும்...

இங்கே பாருங்கள்...

நம்ம திருவாளர்.விவரம், பள்ளிவயதில் எழுதிய கணக்கு விடைத்தாள் ஒன்று அவுட்டாகி ஊருக்குள் பெரும் பரபரப்பாகிவிட்டது...

who says expansion of an expression is tough?

Never mistake me. You dont know the value of square root

Whats the mistake in this? I did correct only

Dont you know where the x is?

Learn cancelling from this example

திருவாளர்.விவரம் வாழ்க...

(மின்னஞ்சல் நகைச்சுவை)

10ஆம் சிரிப்பு.

திருவாளர்.விவரம்-ன் பையன், ஒருநாள் அழுதுகொண்டே வந்தான்...

"அப்பா அப்பா பக்கத்துவூட்டு வாசப்படில இடிச்சுக்கிட்டேன்பா. கால்ல அடிபட்டுடுச்சு..."

தி.விவரத்திற்கு பயங்கர கோபம்... (பக்கத்துவீட்டுக்காரரை கண்டால் அறவே பிடிக்காது வேற!)

"ஏண்டா தடிப்பயலே, போயும்போயும் அவன் வீட்டுவாசப்படியிலயா இடிச்ச? நம்ம வீட்டுவாசப்படியிலேயே இடிச்சுக்கவேண்டியதுதானேடா கழுதை?"

(எங்கோ படித்தது)

9ம் சிரிப்பூ - (கடவுளும் மரம் வெட்டுபவனும்)

ஒரு சின்ன கதை. (இது பழைய கதை அல்ல).


ஒரு மரம் வெட்டுபவன், ஆற்றின் ஓரமாக மரம் வெட்டிக்கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக அவன் கோடாரி ஆற்றில் விழுந்து விட கடவுளை வேண்டுகிறான், "கடவுளே என் கோடாரியை எனக்கு கொடு" என்று. அப்போது கடவுள் ஆற்றில் தோன்றி ஒரு பொன்னால் செய்யப்பட்ட கோடாரியை அவனிடம் நீட்டுகிறார். இது தனதல்ல என்று அவன் மறுக்கிறான். மீண்டும் ஆற்றில் மூழ்கி வந்து ஒரு வெள்ளியால் ஆன கோடாரியை அவனிடம் நீட்ட, இதுவும் தனதில்லை என்று மறுக்கிறான். கடவுள் ஆற்றில் மூழ்கி அவனுடைய கோடாரியை நீட்ட சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறான். அவனின் நேர்மையில் மகிழ்ந்த கடவுள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன கோடாரிகளை அவனுக்கே பரிசாக வழங்கிவிட்டார்.

சில நாட்கள் கழித்து, தன் மனைவியோடு அதே ஆற்றங்கறையில் அவன் நடந்து செல்கிறான். அவன் மனைவி தற்செயலாக ஆற்றில் விழுந்து விட கடவுளை வேண்டுகிறான், "கடவுளே என் மனைவியை எனக்கு காப்பாற்றிக் கொடு" என்று. அப்போது கடவுள் Angelina Jolie வுடன் ஆற்றில் தோன்றி, இவள் தானே உன் மனைவி என்று கேட்கிறார். இவன் உடனே "ஆமாம் இவள் தான் என் மனைவி" என்கிறான். கோபமடைந்த கடவுள், "உண்மையை சொல் ? இவளா உன் மனைவி" என்கிறார்.

உடனே அவன், " இவ என் பொண்டாட்டி இல்லை என்பேன், உடனே வேற ஒரு பிகர காட்டுவீங்க,அவளும் இல்லன்னு நான் சொல்லுவேன், கடைசியில என் பொண்டாட்டிய காட்டி மூணு பேரையும் வச்சுக்கோன்னு சொல்லுவீங்க."

" ஒரு பொண்டாட்டிய வச்சுக்கிட்டே படாத பாடு படறேன், மூனையும் வச்சிக்கிட்டு நான் சாவறதா "


(மின்னஞ்சலில் வந்த கதையின் தமிழாக்கம்)

8ம் சிரிப்பூ - (திருவாளர். விவரம் அறிமுகம்)

திருவாளர். விவரம் : எனக்கு ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு கண்ணாடி வேணும்.

கடைக்காரர் : இந்தாங்க, இது ரொம்ப நல்ல கண்ணாடி.

திருவாளர். விவரம் : எப்படி நான் இதை நம்பறது.

கடைக்காரர் : நீங்க இதை 100 அடி உயரத்தில் இருந்து போட்டாலும், 99 அடி வரைக்கும் உடையவே உடையாது.

திருவாளர். விவரம் : இந்த மாதிரி கண்ணாடியத்தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன்


(குறுந்தகவலில் வந்த நகைச்சுவை, சில மாறுதல்களுடன்)

ஏழாம் (சிரிப்)பூ

ஒருவன்: "டேய், என் கனவுல நேத்து த்ரிஷா வந்தாங்க... ஆனா அவங்க பேசியது எதுவும் எனக்கு கேட்கல... அது ஏன்டா?"

மற்றொருவன்: "டப்பிங் பேசுறவங்களும் கூட வந்தாங்களா பாத்தியா?"

ஒருவன்: "??!!!??"

(எப்.எம்மில் சொன்ன ஜோக்)

ஆறாம் (சிரிப்)பூ

நோயாளி: "டாக்டர், தினமும் என் கனவில எலிகள் எல்லாம் கிரிக்கெட் விளையாடுதுங்க. அதுக்கு ஏதாவது மருந்து இருந்தா கொடுங்க"

டாக்டர்: "இந்தாங்க, இந்த மருந்தை சாப்பிடுங்க. இந்தமாதிரி கனவு வராது !!!"

நோயாளி: "டாக்டர், இதை நாளையிலிருந்து சாப்பிட ஆரம்பிக்கவா?"

டாக்டர்: "ஏன்? இன்னிக்கே சாப்பிட்டா என்ன?"

நோயாளி: " இல்ல டாக்டர், இன்னிக்கு ஃபைனல்ஸ் இருக்கு !!!"

(எங்கோ படித்தது)

ஐந்தாம் (சிரிப்)பூ

ஒரு விஞ்ஞானி உயிருள்ள தவளையை வச்சு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தாரு...

ஆரம்பத்தில அதோட ஒரு காலை வெட்டி விட்டு, "jump" அப்பிடீங்கிறார்.
தவளை மூன்று கால்களால், குதித்தது.

இன்னொரு காலையும் வெட்டிவிட்டு, திரும்பவும் "jump" என்று சொல்ல, மீண்டும் குதித்தது.

மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு, "jump" என அவர் சொன்னதும், தவளை மிகவும் சிரமப்பட்டு, குதித்தது...

இப்பொழுது நான்காவது காலையும் வெட்டிவிடுகிறார்..."jump" என்று சொல்ல, அமைதியாக இருந்தது...

விஞ்ஞானி ஆராய்ச்சி முடிவை இந்தமாதிரி எழுதிக்கிறாரு...
"நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், ஒரு தவளைக்கு காது கேட்காது"

(எங்கோ படித்தது)

நான்காம் (சிரிப்)பூ

சர்தார் தன்னுடைய நண்பருக்கு போன் செய்கிறார்.


தொலைபேசி : நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.


சர்தார் : ரொம்ப முக்கியமான விஷயம், கொஞ்சம் உள்ள வர சொல்லுங்க ப்ளீஸ்.





(குறுந்தகவலில் வந்த நகைச்சுவை)

மூன்றாம் (சிரிப்)பூ - (சர்தாரின் வலி)




சர்தார் : டாக்டர், என் உடம்பு எல்லாம் வலிக்குது, எந்த இடத்தையும் என்னால தொட முடியல, தொட்டா உயிர் போற மாதிரி வலிக்குது.

டாக்டர் : அப்பட்டியா, எங்க உங்க நெத்திய தொடுங்க.

சர்தார் “அய்யோ, அம்மா” ன்னு கத்தராரு (பஞ்சாபியில)

டாக்டர் : உங்க கண்ணத்த தொடுங்க.

மறுபடியும், “அய்யோ, அம்மா” ன்னு கத்தராரு (பஞ்சாபியில)

டாக்டர் : உங்க வயித்த தொடுங்க.

ரொம்ப சத்தமா, “அய்யோ, அம்மா” ன்னு கத்தராறு (பஞ்சாபியில)

டாக்டர் : சரி, இதுல எழுதியிருக்குற டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க

மறு நாள்.

டாக்டர் : உங்க பிரச்சனை என்னனு கண்டுபுடிச்சாச்சு

சர்தார் : என்ன டாக்டர். ?

டாக்டர் : உங்க ஆள் காட்டி விரல் உடைஞ்சு போயிருக்கு.

சர்தார் : டாக்டர் ஒரு சந்தேகம், ஆள் காட்டி விரல் உடைஞ்சா, உடம்பு எல்லாம் வலிக்குமா ? ? ? ? ? ?

டாக்டர், நீங்க, நான் : ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? !




இரண்டாம் (சிரிப்)பூ

"சுவாமி, என் மனைவி என் பேச்சை கேட்பதில்லை,
அவளை கட்டுப்படுத்த ஏதாவது வழி சொல்லுங்களேன் . . . . ? "

டேய்,

"அது தெரியாமத்தானடா,
நானே சாமியாராயிட்டேன். . . . "


(சொந்தக் கற்பனை அல்ல)

முதல் (சிரிப்)பூ (எந்த பிளாட்பாரம்)

இரண்டு பிச்சைக்காரர்கள் பார்த்துக்கிட்டாலும்,
இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியரகள் பார்த்துக்கிட்டலும்,
ஒரே கேள்வியத்தான் கேட்பாங்க

என்ன அது.


ஆமா, எந்த பிளாட்பார்ம்ல ஒர்க் பண்ற




(குறுந்தகவலில் வந்த சிரிப்பூ)

வணக்கங்கோ . . . . .

நம்ம புரபொசர் புண்ணியத்துல, வலைப்பூக்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன், தெனமும் வலைப் பூ படிக்கறது ஒரு பழக்கமாவே ஆயிடிச்சு. நன்றி கார்த்தி(புரபொசர்) ஒரு நல்ல விஷயத்த அறிமுகப்படுத்தியதற்கு.


நானும் அவரும் கூட்டணி வச்சு இல்ல இல்ல இணைஞ்சு இந்த சிரிப்பூ வ ஆரம்பிக்கிறோம்.





சூனா பானா இத அப்புடியே மெய்ண்டன் பண்ணிக்க

இன்னக்கி அவ்ளோதான், போய் வேல வெட்டிய பாருங்க

(சும்மா தமாசுக்கு)